சங்ககிரியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம்

சங்ககிரியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார்.;

Update: 2024-02-08 11:03 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரியில் நாமக்கல் மாவட்ட அதிமுக தொழில்நுட்ப நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி சரோஜா சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் உட்பட அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுக ஆட்சி காலத்தில் தான் மக்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு கொண்டு வந்து நன்மைகளை செய்த கட்சி அதிமுக என்று பேசினார்.

Advertisement

அதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தன் முதன் முதலில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பயிற்சி பட்டறை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் தகவல் தொழில்நுட்ப அணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திறன்பட செயல்பட்டு நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக அதிக வாக்குகளை பெற பெரு உதவியாக இருக்க வேண்டும் என்றும் பேசினார் அப்போது அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஏராளமானோரை இதில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News