அதிமுக நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தேர்தல் பிரச்சாரம்.....

சத்தியமங்கலத்தில் அதிமுக நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.;

Update: 2024-04-11 08:42 GMT

அதிமுக

10 ஆண்டுகளாக நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற ஆராசா அவர்களால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என சத்தியமங்கலத்தில் அதிமுக நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேச்சு. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Advertisement

அப்போது பேசிய அவர் வாக்கு சேகரிக்கும் இந்த கூட்டத்தை பார்க்கும் பொழுது இது வெற்றி விழா கூட்டமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

மேலும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை நாம் நிரூபித்து காட்டிக் கொண்டிருக்கின்றோம் என தெரிவித்த அவர் நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி வாக்குகளை அளித்து அவரை வெற்றி பெறச் செய்து வெற்றி வேட்பாளராக அவரை டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அதன் பின்னர் பேசிய நீலகிரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கடந்த 10 ஆண்டுகளாக திமுகவில் வெற்றி பெற்று நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ஆ.ராசா அவர்களால் எந்த ஒரு பிரயோஜனமும் இந்த தொகுதியில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மக்கள் பிரச்சினை என்னவென்று அவருக்கு தெரியவில்லை என தெரிவித்த அவர் மக்களை இதுவரை சந்திக்கவே இல்லை எனவும் தெரிவித்தார்.‌ மேலும் ஆ.ராசா அவர்கள் பல்வேறு ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ஒரு நபராக உள்ளார் எனவும் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு இந்த தொகுதிக்கு அவரால் மிகப் பெரிய அவப்பெயர் உண்டாகி உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்குக்கா மக்கள் பணியை செய்ய காத்திருக்கும் எனக்கு நீங்கள் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News