அகில பாரத இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்
உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்;
Update: 2023-12-12 07:44 GMT
அகில பாரத இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்
உளுந்துார்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவில் இடப்பிரச்னையில் இந்து அறநிலைத்துறையை கண்டித்து அகில பாரத இந்து மகாசபா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பெரிசெந்தில் தலைமை தாங்கினார். தலைவர் பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கோவில் இடப்பிரச்னையை கண்டுகொள்ளாமல் இருந்த ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும், சுப்பிரமணிய சுவாமி கோவில் 60 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுக்காதையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் சபரிராஜன், மாவட்ட துணைத் தலைவர் ஐயப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டசந்துரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.