மது விற்பனை தாராளம்

திருவள்ளுவர் தினமான இன்று கரூரில், பகல் நேரத்திலும் தடையை மீறி மது விற்பனை தாராளமாக நடக்கிறது.

Update: 2024-01-16 10:16 GMT

தமிழக அரசின் சார்பில் டாஸ்மார்க் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சில கடைகளில் டாஸ்மாக் கடையுடன் பார்கள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், முக்கிய விழா நாட்களில் மது விற்பனையை தடை செய்தும் அரசு அவ்வப்போது அறிவிப்பு செய்து வருகிறது. இதன் அடிப்படையில் இந்த மாதத்தில் ஜனவரி 16 திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், 25 ஆம் தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டும், 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் மதுக்கடைகள், அதனுடன் இணைந்த பார்கள் செயல்படக்கூடாது என ஜனவரி 11ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பு செய்து இருந்தார். அ

றிவிப்பை மீறி மதுக்கடைகளோ, பார்களோ திறந்து வியாபாரம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்திருந்தார். கரூர் பேருந்து நிலையத்தின் முகப்பு பகுதியில் டாஸ்மாக் கடையும் அதனுடன் இணைந்த பார் செயல்பட்டு வந்தது. இதில் டாஸ்மார்க் கடை அரசின் அறிவிப்புக்கு ஏற்ப இன்று மூடப்பட்டுள்ள நிலையில், அருகிலுள்ள பாரில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது.

மது விற்பனை நடப்பதை படம் பிடிக்க சென்ற செய்தியாளர்களை கண்டதும் மது பிரியர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பாரை நடத்தி வந்த உரிமையாளர் உடனடியாக பாரின் ஷட்டரை இழுத்து மூடினார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News