அகில இந்திய ஹாக்கிப் போட்டி துவக்கம்: சென்னை அணி வெற்றி
கோவில்பட்டியில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 13வது அகில இந்திய ஹாக்கிப் போட்டியின் முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பதின்மூன்றாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெற்றுகிறது. இதன் துவக்க விழா நேற்று காலை நடைபெற்றது.கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமை வகித்தனர்.
முதல் போட்டியை முன்னாள் இந்திய ஹாக்கி வீரரும், சென்னை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் மேலாளரும் கோவில்பட்டியை சேர்ந்தவருமான ஆர்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியினை துவக்கிவைத்தார். முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் நேஷனல் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் முனைவர் எஸ்.சண்முகவேல் அனைவரையும் வரவேற்றார்.
மேலும், இவ்விழாவில் கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர் சி.ராமசாமி, கே.ஆர். கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் முனைவர் கே.காளிதாச முருகவேல், முனைவர் எஸ்.மதிவண்ணன் மற்றும் பேராசிரியர் எ.ராஜேஸ்வரன், ஹாக்கி வீரர்கள், ஹாக்கி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.