அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயலாற்றியது: மேயர் பிரியா
மாநகராட்சி சார்பில் தடுப்புகள் அமைத்து அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயலாற்றியதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.;
By : King 24x7 Desk
Update: 2024-10-07 06:45 GMT
Mayor
சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களிடம் பேசுகையில், தலைமைச் செயலாளர் தலைமையில் 2 கூட்டங்கள் நடத்தி பல சேவைகள் துறையை ஒருங்கிணைத்து ஏற்பாடுகள் செய்தோம். மாநகராட்சி சார்பில் ஏற்கனவே கடைகள் அகற்றி, தடுப்புகள் அமைத்து அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயலாற்றியது. அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வெயிலின் தாக்கத்தினால் தான் மயக்கம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் நானும் இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.