பாஜக - பாமக இடையே கூட்டணி உறுதி?

Update: 2024-03-14 09:01 GMT

பாஜக - பாமக 

நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு கட்சியினர்களிடம் இடையே தொகுதி பங்கீடு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாஜக பாமக இடையேயான கூட்டணி இறுதி கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாமக 10 லோக்சபா தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா தொகுதிகளையும் அதிமுக மற்றும் பாஜக விடம் வலியுறுத்தி வருகிறார்.

அதிமுகவிடம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் பாமக பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து பாஜக 10 லோக் சபா சீட் தர இருப்பதாகவும் பாமகவில் ஒருவர் எம்பி ஆனால் அமைச்சர் பதவி பற்றி பேசலாம் என கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி பாஜக பாமக இடையேயான கூட்டணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

Tags:    

Similar News