பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் 20 ஏக்கர் நிலம் ஒதுக்கியது வழக்கு முடித்து வைப்பு
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கிய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளை கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கிய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளை கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை ஐ.ஜி- 3 இன்போ நிறுவனத்துக்கு ஒதுக்கியது குறித்து விசாரணை நடத்த கோரியும்,
துணை போன அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும் கலாமின் அக்னி சிறகுகள் அறக்கட்டளை செயலாளர் செந்தில் குமார் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சட்டவிரோதமாக எவருக்கேனும் ஒதுக்கப்பட்டுள்ளதா? அந்த நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய மனுதாரர் அந்த குழுவை அணுகலாம் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரரின் புகாரை குழு பரிசீலிக்கும்படி தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.