அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
அதிமுக - தேமுதிக கட்சிகளிடைய தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
சென்னை இராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக - தேமுதிக கூட்டணி தொகுதி பங்கீடுஒப்பந்தம் கையெழுத்தானது. அஇஅதிமுக கூட்டணியில் தேமுதிக திருவள்ளூர் தனி, மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர் விருதுநகர், தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்முறையாக அதிமுக அலுவலகம் வந்தது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார். அஇஅதிமுக - தேமுதிக அரசியல் வரலாற்றில் சகாப்தத்தை படைத்து போல் மீண்டும் வெற்றி கூட்டணி அமைந்துள்ளதாக கூறினார் .2026 சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி அமையும் என தெரிவித்த அவர், தேமுதிக அலுவலகத்திற்க்கு நாளை எடப்பாடி பழனிசாமி அவர்கள் வருகை தரும் போது நல்ல செய்தி அறிவிக்கப்படும் என கூறினார்.
இதையடுத்து பேசிய, அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக எவ்வித தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறினார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்த திமுக அவற்றை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் 38 உறுப்பினர்களை வைத்தும் நீட் தேர்வு ரத்து செய்ய அவர்கள் முயலவில்லை என தெரிவித்தார். அதிமுக விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளரையும் , தேர்தல் அறிக்கையும் விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.