அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு

Update: 2023-12-21 09:54 GMT

அமைச்சர் ராஜ கண்ணப்பன்

பிற்படுத்தப்பட்டோர் நலன் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராஜ கண்ணப்பன் வசம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை, கைத்தறித்துறை அமைச்சர் காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு  செய்யப்பட்ட  முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Tags:    

Similar News