நாகை திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கீடு: முத்தரசன்

40 தொகுதிகளின் வெற்றிக்காக நாம் தொடர்ந்து உழைப்போம் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-12 16:48 GMT

தொகுதி ஒதுக்கீடு 

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் அந்த தொகுதி எந்தெந்த தொகுதிகள் அடையாளம் காண இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அண்ணா அறிவாயலம் வருகை தந்து முதலமைச்சரை சந்தித்தனர்.

முதலமைச்சரை சந்தித்த பின் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்... இரு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு கையெழுத்தானது.. நாகை திருப்பூர் ஆகிய தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது மத்திய அரசு, மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று பாஜக செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் தோழமைக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து கூட்டணி முடிவாகி இருக்கிறது. வேட்பாளர்கள் யார் என்பதை கட்சி முடிவு செய்து ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படும். 40 தொகுதிகளின் வெற்றிக்காக நான் தொடர்ந்து உழைப்போம்.

Tags:    

Similar News