வெற்றிகரமாக தரையிறங்கியது திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட விமானம்!!

திருச்சியில் இருந்து புறப்பட்டு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 2 மணிநேரமாக வானத்தில் வட்டமடித்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

Update: 2024-10-11 15:05 GMT

air india

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்சியில் இருந்து புறப்பட்டு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 2 மணிநேரமாக வானத்தில் வட்டமடித்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரமாக விமானம் வானத்தில் வட்டமிட்டு வந்தது. விமானத்தை மீண்டும் தரையிறக்கும் முயற்சியில் விமானிகள் ஈடுபட்டனர். ஆனால் விமானத்தை தரையிரக்குவதில் சிக்கல் இருந்தது. புதுக்கோட்டை அன்னவாசல், சுற்றுவட்டாரப் வான் பகுதியில் தென்பட்ட விமானம், அப்பகுதியில் வட்டமடித்து வந்தது. இந்த விமானத்தில் 141 பயணிகள் இருந்தனர். விமான நிலையத்திற்கு வெளியே 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினியும் விமான நிலையம் விரைந்தார். எரிபொருளை குறைத்து விமானத்தை எமர்ஜெர்ன்சி லேண்டிங் செய்ய குறைந்தது 4 மணி நேரம் ஆகலாம் என்றும், எமர்ஜென்சி லேண்டிங்கின்போது விமானம் சற்று அதிர்வுகளுடன் தரையிறங்கும் என்றும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். விமானத்தின் சக்கரம் உள்ளே செல்லாததால், விமானத்தை மீண்டும் தரையிறக்க விமானிகள் முயற்சி; விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.  தீப்பற்றுவதை தவிர்க்க எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்க திட்டமிடப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. திருச்சி விமான நிலையத்திற்கு மருத்துவக் குழு விரைந்தது. இந்த நிலையில் விமானம் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

Tags:    

Similar News