நிலப் பறவைகள் கணக்கெடுப்பு - இன்று மாலை துவங்குகிறது!
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடக்கிறது.
Update: 2024-03-02 10:25 GMT
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நீலகிரி வனக்கோட்டம், கூடலூர் வனக் கோட்டம் , முதுமலை புலிகள் காப்பகம் என மாவட்டம் முழுவதும் உள்ள வனப்பகுதிகள் நடக்கிறது. இப்பணியில் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் ஈடுபட்டவுள்ளனர். பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ளவர்களுக்கு ஊட்டி கேர்ன் ஹில் சூழல் சுற்றுலா மையத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து வனத்துறையினர் பயிற்சி அளித்தனர். இந்த நிலப் பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று மாலை, நாளை காலை என இருதினங்கள் நடைபெறவுள்ளது. 25 குழுவினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.