ராணிப்பேட்டையில் மனு கொடுக்க பெட்ரோல் கேனுடன் வந்த மூதாட்டி

ராணிப்பேட்டையில் மனு கொடுக்க பெட்ரோல் கேனுடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-02-12 15:49 GMT

பெயர் பலகை 

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் வளர்மதி தலைமை தாங்கினார். துணை ஆட்சியர் ஸ்ரீவள்ளி, மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் முரளி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுலலர் பூங்கொடி, மாற்றுத்திறனாளிகள் துறை நல அலுவலலர் சரவணகுமார் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தனர்.

பெட்ரோல் கேன்: பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்ட நாளில் ஆட்சியர் அலுவலகத்துக்கு நுழைவு வாயில் முன்பு காவல்துறையிரன், மனு அளிக்கும் வரும் பொதுமக்களின் உடமைகள் பரிசோதனை செய்து அனுப்புவது வழக்கம். அதன்படி, காவல்துறையினர் அதேபோன்று பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது, அங்கு வந்த முதியவர் கொண்டு வந்த பையை காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில், அரைலிட்டர் பாட்டிலில் பெட்ரோல் இருந்தது. காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த நபர் வாலாஜா அடுத்த வள்ளும்பாக்கம் ராமாபுரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (64), திருமணம் ஆகாதவர்.

இவருக்கு சேர வேண்டிய சொத்தை உறவினர்கள் பிரித்த தர மறுக்கிறார். இதற்கு ஏற்கனவே மனு அளித்தேன் நடவடிக்கை இல்லை. மனு மீது உரிய நடவடிக்கை இல்லாத காரணத்தினால் பெட்ரோல் கேனுடன் வந்ததாக தெரியவந்தது.

இதனையடுத்து, காவல்துறையினர் அவரை ராணிப்பேட்டை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. வாலாஜா ஊராட்சி ஒன்றியம் நவ்லாக் ஊராட்சியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 11 பேர் அளித்த மனுவில் நவ்லாக் ஊராட்சியின் தலைவராக சரஸ்வதி குமார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற மாதாந்திர கூட்டம் நடத்தப்பட்டது. நாங்கள் பங்கேற்காமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம். இதுதொடர்பாக அமைச்சர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து பேசினோம். ஜனவரி மாதம் கூட்டம் நடத்தவில்லை. இந்த மாதம் நடைபெற்ற கூட்டம் நடந்தது. இதில் ,15 மாநில நிதிக்குழு ஊராட்சிக்கு ஒதுக்கிய பணத்தில் இந்த ஆண்டு சிறப்பாக செயல்படல என்று கூறினார்.

தீர்மானம் பதிவேட்டில் அவர்களே தீர்மானம் எழுதி கையெழுத்து போடச்சொன்னார்கள். வருகை பதிவேட்டிலும் கையெழுத்து போடச்சொன்னார்கள் நாங்கள் மறுத்து வெளிநடப்பு செய்தோம். ஏற்கனவே தெரிவித்த தீர்மானங்களில் சிறிய அளவிலான பணிகள் மேற்கொள்ளவில்லை. பணமில்லை, வேலையாட்கள் இல்லை என்று கூறுகிறார்கள். 15-வது மாநில குழு நிதியில் செய்ய வேண்டி பணிகளை அவர்களே எழுதி விட்டும்,

ஊராட்சியில் நிறைய குழாய் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை கூறி பல லட்சம் கணக்கு காட்டுகிறார்கள். அதற்கான உண்மை அறிக்கை தெரிவிப்பது இல்லை. சிப்காட் தொழிற்சாலைகள், ஊராட்சியில் பகுதியில் வீட்டு வரி, குழாய் வரிக்கும் சரிவர கணக்குகாட்டுவதில்லை. ஊராட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை மாவட்டம் நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News