விபத்தில் முதியவர் பலி

அரியலூர் அருகே கார் மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.;

Update: 2024-06-29 03:07 GMT
விபத்து ஏற்படுத்தி விட்டு அப்பளம் போல் நொறுங்கி கிடக்கும் கார்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குழுமூர் துர்க்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணிவண்ணன் (64) மற்றும் அவரது தம்பி கண்ணன் மகன் கோவர்த்தனன் (18) ஆகிய இருவரும் மணிவண்ணன் மோட்டார் சைக்கிள் ஓட்ட கோவர்த்தனன் பின்னால் உட்கார்ந்து கொண்டு மயிலாடுதுறைக்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊர் செல்வதற்காக பொன்னேரி பகுதியில் திரும்பி வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் மோதிய விபத்தில் மணிவண்ணன், கோவர்தனன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

Advertisement

இதில் முதியவர் மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவர்த்தனன் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் கார் ஓட்டி வந்த விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் சோழதரம் குடிகாடு கீழத் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பழனிச்சாமி (36) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

காரில் பயணித்த கார் டிரைவர் மற்றும் குடிகாடு அரசு பள்ளி ஆசிரியர் சேரன் உள்பட நான்கு பேரும் காயம் ஏதுமில்லாமல் உயிர் தப்பினர். இந்தக் கோர விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மகன் கண் முன்னே பெரியப்பா இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் முதியவர் மணிவண்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை பிரயோக பரிசோதனை கூடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News