புராதன சின்னங்கள் பாதுகாக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
புராதன சின்னங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த செயல்களிலும் இந்திய தொல்லியல் துறை ஈடுப்படக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Update: 2024-05-03 07:32 GMT
அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவிலில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை கோரி பாலகுரு என்பவர் தொடர்ந்த வழக்கில், புராதன சின்னங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த செயல்களிலும் இந்திய தொல்லியல் துறை ஈடுப்படக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரியலூரில் 1000 ஆண்டுகள் பழமையான கோவில் வளாகத்தில், புராதன சின்னங்கள் பாதிக்கப்படாத வகையில் கட்டுமானங்களை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது .