குழந்தை காப்பாகங்களாக மாறும் அங்கன்வாடி மையம்
100 குழந்தைகள் மையங்கள் அங்கன்வாடி மையம் இணைந்த குழந்தைகள் காப்பகங்களாக தரம் உயர்த்தப்படும் என சமூக நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 குழந்தைகள் மையங்கள் அங்கன்வாடி மையம் இணைந்த குழந்தைகள் காப்பகங்களாக தரம் உயர்த்தப்படும் என சமூக நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளின் படி, சமுதாயத்தில் பணிக்கு செல்லும் தாய்மார்களின் ஆறு மாத முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளை மிகவும் பாதுகாப்பான இடத்தில் பராமரிக்கவும், பணிபுரியும் பெண்கள் தொடர்ந்து பணிக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையிலும், தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டம் பால்னா என்ற பெயரில் மறுபடிவமைப்பு செய்யப்பட்டு அங்கன்வாடி மையம் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் தோற்றுவிக்க தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி தற்போது 100 குழந்தைகள் மையங்கள், அங்கன்வாடி மையம் இணைந்த குழந்தைகள் காப்பகங்களாக தரம் உயர்த்தப்படும் எனவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.