பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்- அண்ணாமலை பேட்டி

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்- அண்ணாமலை பேட்டி.

Update: 2024-04-19 06:41 GMT

 அண்ணாமலை பேட்டி

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்- அண்ணாமலை பேட்டி. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை இன்று தனது வாக்கை செலுத்துவதற்காக கரூர் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு, கரூர் நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் செந்தில்நாதன் உடன் வந்தார். பின்னர் வாக்கு மையத்திற்கு சென்று தனது வாக்கை செலுத்திய அண்ணாமலை அங்கு கூடியிருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மிக மிக நேர்மையாக இந்த தேர்தலை எதிர்கொண்டுள்ளேன். திமுகவைப் பற்றி உங்களுக்கே தெரியும். கோவை நாடாளுமன்ற தொகுதியில், எவரேனும் ஒரு வாக்காளருக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்றார். தர்மத்தின் போராட்டமாக இந்த தேர்தலை நான் கருதுகிறேன். எல்லோரையும் எதிர்த்து களத்தில் நிற்கிறேன். பணத்தை வைத்துக்கொண்டு, கோவை நாடாளுமன்ற தொகுதி மற்றும் தமிழகத்தில் உள்ள மக்களை வாங்கிவிடலாம் என திமுக, வேறு வேறு கட்சியினர் என்னுகின்றனர். பண அரசியல் என்பது முடிந்துவிட்டது. கோவை மற்றும் கரூர் வாக்காளர்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலுக்கு முதல் நாள் இரவு விளக்குகளை அனைத்து விட்டு பணத்தைக் கொடுத்தால் வாக்காளர்கள் வாக்கு செலுத்தி விடுவார்கள் என்ற எண்ணம், இந்த தேர்தலில் இருந்து மாறுபடும் என்றார்.
Tags:    

Similar News