புற்றுநோய் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக ராணிப்பேட்டை அறிவிப்பு !

புற்றுநோய் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக ராணிப்பேட்டை உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2024-02-23 09:49 GMT

அமைச்சர் மா சுப்பிரமணியன்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நமக்கு நாமே திட்டம் மற்றும் தனியார் நிறுவனத்தின் (சன் டிவி நெட்வொர்க்) CSR நிதி பங்களிப்புடன் 14 துணை சுகாதார நிலையம் கட்டிடங்கள் ரூ.6.65 கோடி மதிப்பில் கட்டப்பட்ட, புதிய துணை சுகாதார நிலைய கட்டிடங்களின் திறப்பு விழா நிகழ்ச்சி வாலாஜா அடுத்த குடியமல்லூரில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பங்கேற்று துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்கள் பயயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழக அரசு சுகாதாரம் மற்றும் கல்விக்கு முக்கியத்தும் கொடுத்து வருகிறது. எனவே, கிராம மற்றும் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் இதுபோன்ற துணை சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார். ராணிப்பேட்டை நவ்லாக் மற்றும் மேல்விஷாரம் , சோளிங்கர் பாணாவரம் பகுதியில் மருத்துவனையின் புறநோயாளிகள் பிரிவு செவிலியர்கள் விடுதிகள் என்று மொத்தம் 6 கட்டிடங்கள் கட்டி முடிக்கப்ப்டடு தொடங்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. புற்றுநோய் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை அல்லது சுற்றுச்சூழல் காரணமாக வருகிறதா என்று பல்வேறு வகையான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் தோல் பதனிடும், சாய பட்டறை கழிவுகள் நிறைந்த இடங்களில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் உள்ளது. புற்றுநோய் பாதிப்புகள் முதல் நிலை முதல் 4 நான்கு நிலை என்று பிரிக்கப்படுகிறது. இதில், பாதித்தவர்களை முதல் மற்றும் 2 -ம் நிலையில் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஈரோடு, கன்னியாக்குமாரி ஆகிய மாவட்டங்களில் 18 வயது கடந்த மக்களுக்கு ஒட்டுமொத்தமாக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த மாவட்டங்களில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 145 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12 லட்சத்து 62 ஆயிரத்து 156 பேருக்கு இந்த பரிசோதனை தொடங்கப்பட்டது. 41 ஆயிரத்து 396 பேருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9,566 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையில் 222 பேருக்கும், கருப்பை வாய் புற்றுநோய் 290, பேருக்கும், வாய் புற்றுநோய் 29 பேருக்கு உள்ளது. 4 மாவட்டங்களில் நடைபெற்ற ஆய்வில் இதுவரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகம் உள்ளது. ஆறுதல் செய்தி என்னவென்றால் அவர்கள் அனைவருக்கும் ஆரம்பநிலை புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதால், இந்த அரசு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றும் என தெரிவித்தார். இதில் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள், ஒன்றியம், நகராட்சிகளைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News