அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி
டி புதூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்று இனிமையான செய்திகளை கூறினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-14 10:25 GMT
அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள டி புதூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று செவ்வாய்க்கிழமை சுமார் 4 மணியளவில் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் வினாயகம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் கோகுல்ராஜ் கலந்துக் கொண்டார். இதில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, விழிப்புணர்வு நாடகம், உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் பேசிய ஊராட்சி மன்ற தலைவர் கோகுல்ராஜ் இந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் 80 சதவீதம் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு இலவசமாக உயர்கல்வி படிக்க அனைத்து வசதிகள் செய்து தரப்படும் எனவும், அதேபோல் விளையாட்டு உள்ளிட்ட தனித்திறமைகள் உள்ள மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என மாணவர்களுக்கு இன்ப செய்தியை கொடுத்தார். அதேபோல் நீண்ட ஆண்டுகளாக பிரச்சனையாக உள்ள குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்படும் என மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தார். இந்த பள்ளி ஆண்டு விழாவில் வார்டு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், துணைத் தலைவர், எஸ் எம் சி குழு தலைவர், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.