ஊழல் தடுப்பு சோதனையில் கொத்தாக சிக்கிய அரசு ஊழியர்கள்
திண்டுக்கல்லில் உள்ளாட்சி நிதி தணிக்கைப் பிரிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் துறையின் ஆய்வாளா்கள் உள்பட 15 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Update: 2024-05-29 08:33 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத பணம் 1,57,000 பறிமுதல் செய்தனர்.அத்துறையின் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். கணக்கில் வராத பணம் 1,57,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கை பிரிவு ஆய்வாளர்கள் 7 பேர், ஊராட்சி அலுவலர்கள் 8 பேர் என மொத்தம் 15 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.