சிப்காட் எதிர்ப்பு : விடுதலையானவருக்கு உற்சாக வரவேற்பு
மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிராக போராடி குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலையான அருள் ஆறுமுகத்திற்கு கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அலகு 3 திட்டத்திற்கு 3,174 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் அறவழியில் கடந்த 125 நாட்களாக காத்திருப்பு போராட்டம் கருப்புக்கொடி கட்டிப் போராட்டம் நடைபயணம் சாலையில் உணவு அருந்தி போராட்டம் என பல்வேறு போராட்டங்களை செய்து வந்த நிலையில் 7 பேர் மீது தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது.
இதில் ஆறு பேர் மட்டும் தொடர் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்ட நிலையில் அருள் மட்டும் விடுவிக்கவில்லை இது தொடர்பாக அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் கடந்த நாலாம் தேதி குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஐந்தாம் தேதி தமிழக அரசு அவர் மீதான வழக்குகளை விளக்கிக் கொண்ட பிறகு நேற்று காலை 9 மணி அளவில் பாளையங்கோட்டை சிறையிலிருந்து விடுதலை ஆகி மேல்மா சிப்காட்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேரில் சென்று அவருக்கு வரவேற்பு அளித்து பல்வேறு இடங்களில் வரவேற்பு அளித்த நிலையில் இன்று செய்யாறு அருகே மேல்மா கூட்டு ரோட்டில் வருகை தந்த போது மேல்மா. குரும்பூர். நர்மா பள்ளம். உள்ளிட்ட10 கிராம மக்கள் ஒன்று கூடி மேலதாள வாத்தியங்களுடன் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.