தங்கப் பதக்கம் வென்ற ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர் .
அரியலூர், ஜூன்.19- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரியலூர் மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்ப பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் கடந்த மாதம் மாநில அளவில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் மேற்குவங்க மாநிலம் சிலிகுரி நகரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் சுபாஷினி, எழில் பாத்திமா ஆகியோர் வெவ்வேறு பிரிவுகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்றனர். அதுபோல் அக்ஷயா, நந்தினி, தினேஷ், நவீன் குமார் ஆகியோர் வெவ்வேறு பிரிவுகளில் தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளனர். மேலும் ஆதிரசஹானா, முகுந்தன் ஆகியோர் வெவ்வேறு பிரிவுகளில் வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்கள் ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய போது அவர்களுக்கு பெற்றோர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு பேருந்து நிலையத்திலிருந்து ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி வரை மாணவ மாணவிகளின் பலத்த கரகோஷங்கள் இடையில் வீர வீராங்கனைகளும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் வெற்றி பெற்ற அனைவரையும் வாழ்த்தி பேசினர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேசிய அளவில் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ள நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நிகழ்ச்சியில் ரீடு தொண்டு நிறுவனம் ரீடு செல்வம் பீனிக்ஸ் பெண்கள் மற்றும் மகளிர் அறக்கட்டளை பரமேஸ்வரி ஆனந்தராஜ் சந்திரா மற்றும் பொதுமக்கள் சமூக அலுவலர்கள் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்