சென்னை மாநகரின் அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் தீவிரம்
சென்னை மாநகரின் நீர் வழிகளை மறுசீரமைத்தல் ஆற்றங்கரை ஓரத்தில் வாழும் குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு 2025-ம் ஆண்டுக்கு மார்ச் மாதத்துக்குள் இப்பணி முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-22 09:21 GMT
அடுக்குமாடி குடியிருப்பு
சென்னை நகர நீர் வழிகள் மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அடையாறு மற்றும் கூவம் ஆற்றங்கரைகளில் வாழும் குடும்பங்கள் நீர் வளத்துறையால் கணக்கிடப்பட்டு பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பிற துறைகளில் ஒருங்கிணைப்புடன் நீர்வளத் துறையின் கோரிக்கையின் அடிப்படையில் ,தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் குடியமர்த்தப்படுகின்றனர் .
தற்போது வரை அடையாறு மற்றும் கூவம் பகுதிகளில் 18,535 குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள குடும்பங்கள் வருகின்ற 2025 ஆம் ஆண்டுக்குள் மார்ச் மாதத்துக்குள் மறுகுடியமர்வு செய்ய அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..