ஓபிஎஸ் தொடர்ந்து மேல் முறையீட்டு வழக்கு: 25 ஆம் தேதி விசாரணை
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல் முறையீடு வழக்கு வரும் 25 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-22 16:54 GMT
பன்னீர் செல்வம்
அதிமுக கொடி, சின்னம், லெட்டர் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை தொண்டர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த தனக்கு, கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று மனு அளிக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு வரும் 25ம் தேதி திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.