அரக்கோணம்: தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் விரைவு ரயில் மோதி பலி
அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது விரைவு ரயில் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
அரக்கோணம் சந்திப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (23).இவரது உறவினர் சாந்தி (50). நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பத்தினர் 5 பேருடன் காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணத்திற்கு மின்சார ரயிலில் வந்தனர். பின்னர் அரக்கோணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் புத்தூருக்கு கட்டு கட்ட செல்வதற்காக நடைமேடை 6 ல் வந்து இறங்கினர். பின்னர் அங்கிருந்து தண்டவாளத்தை கடந்து 2 நடைமேடைக்கு வர முயன்ற போது சென்னையில் இருந்து அரக்கோணத்தில் நிற்காமல் செல்லும் திருவனந்தபுரம் விரைவு மின்சார ரயில் மோதியதில் சந்துரு மற்றும் சாந்தி சம்பவ இடத்திலேயே உடல் மூன்று துண்டாகி உயிரிழந்தனர். இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அரக்கோணத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.