ஆற்காடு நகராட்சி பள்ளி வாக்கு சாவடி மையத்தில் ஆட்சியர் ஆய்வு!
வாக்கு சாவடி மையத்தில் ராணிப்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி ஆய்வு செய்தார்.;
Update: 2024-04-02 17:03 GMT
ஆட்சியர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.