மது போதையில் தகராறு இளைஞர் மண்டை உடைப்பு.
சென்னையில் டாஸ்மாகில் நடைபெற்ற தகராற்றில் இளைஞர் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-04-24 09:41 GMT
மது போதையில் தகராறு இளைஞர் மண்டை உடைப்பு
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்றிரவு பாகேஷ்குமார் (37) என்பவர் மது அருந்தியுள்ளார். எதிரே அமர்ந்திருந்த முத்துஜா அகமது என்பவர் பாகேஷ்குமார் போனை எடுத்து பார்த்துள்ளார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, முத்துஜா மது பாட்டிலால் பாகேஷ் குமாரின் மண்டையை உடைத்துள்ளார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முத்துஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.