அரியலூர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் !
அரியலூர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 6 ஆயிரம் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும், நாடாளுமன்ற தேர்தலில் சந்திரகாசனை வெற்றி பெற செய்ய வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-03-22 05:51 GMT
அரியலூர், மார்ச் 22 - அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திருச்சியில், எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கும் பிரசார கூட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் இருந்து குறைந்தது 6 ஆயிரம் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பது, சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தலில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக களப் பணியாற்றி, வேட்பாளர் சந்திரகாசனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம், மாவட்ட பொருளாளர் அன்பழகன், நகரச் செயலர் ஏ.பி.செந்தில், மாவட்ட அம்மா பேரவைச் செயலர் ஒ.பி.சங்கர், இணைச் செயலர் நா.பிரேம்குமார், ஒன்றியச் செயலாளர்கள் செல்வராஜ், பாலசுப்பிரமணியன், அண்ணா தொழிற்சங்கச் செயலர் கல்லங்குறிச்சி பாஸ்கர், வழக்குரைஞர் பிரிவு நிர்வாகிகள் வெங்கடாஜலபதி, ராமகோவிந்தராஜன், மாவட்ட மகளிரணிச் செயலர் ஜீவா அரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.