பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலூர் மாவட்டம் முதல் இடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97.31% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளது.

Update: 2024-05-11 01:11 GMT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97.31% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளது.


அரியலூர், மே 10 - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலூர் மாவட்டம் 97.31சதவீதம் பெற்று மாநில அளவில் முதல்  இடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில், 172 பள்ளிகளைச் சேர்ந்த 9565 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 9308 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சியில் 97.31 சதவீதம் பெற்று மாநில அளவில் அரியலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு தேர்ச்சியில் 95.40 சதவீதம் பெற்று மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 6 ஆவது இடம் பெற்றிருந்தது. பள்ளிகள் வாரியாக... மாவட்டத்தில் 116 அரசு பள்ளிகளில் பயின்ற 2,959 மாணவர்கள், 2,655 மாணவிகள் ஆக மொத்தம் 5614 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2,813 மாணவர்கள், 2585 மாணவிகள் என ஆக மொத்தம் 5,400 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசுப் பள்ளி தேர்ச்சி சதவீதம் 96.19ஆகும். 15 அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 899 மாணவர்கள், 1261 மாணவிகள் ஆக மொத்தம் 2,160 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 874 மாணவர்கள், 1,252 மாணவிகள் ஆக மொத்தம் 2,126 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 99.29 ஆகும். 3 அரசு ஆதிதிராவிட நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 21 மாணவர்கள், 23 மாணவிகள் ஆக மொத்தம் 44 பேர் தேர்வு எழுதினர். இதில் 20 மாணவர்கள், 23 மாணவிகள் என ஆக மொத்தம் 43 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.73 ஆகும். 23 மெட்ரிக் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 815 மாணவர்கள், 596 மாணவிகள் ஆக மொத்தம் 1,411 பேர் தேர்வு எழுதினர். இதில் 811 மாணவர்கள், 592 மாணவிகள் என ஆக மொத்தம் 1403 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.43 ஆகும். 15 சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 208 மாணவர்கள், 128 மாணவிகள் என ஆக மொத்தம் 336 பேர் தேர்வு எழுதினர். இதில் 208 மாணவர்கள், 128 மாணவிகள் என ஆக மொத்தம் 336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 100 ஆகும்.100 சதவீதம் தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை... அரசுப் பள்ளி }52, ஆதிதிராவிடர் நலப் பள்ளி}1, அரசு உதவிப் பெறும் பள்ளி}9, மெட்ரிக் பள்ளி}18, சுயநிதிப் பள்ளி}14 என ஆக மொத்தம் 94 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளன. அரியலூர் மாவட்டம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் மாநில அளவில் முதலிடம் பெற்றறமைக்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News