ஆற்காடு சாலையில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது
சாலிகிராமம் ஆற்காடு சாலையில் உள்ள பெட்டிக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-05-05 05:54 GMT
சாலிகிராமம் ஆற்காடு சாலையில் உள்ள பெட்டிக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சாலிகிராமம் ஆற்காடு சாலையில் கே.கே நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெட்டிக்கடை ஒன்றின் பூட்டை மர்ம நபர் உடைத்துக் கொண்டிருந்தார். அவர் போலீசாரை கண்டதும் ஓட ஆரம்பித்தார். போலீசார் விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் கோயம்பேட்டை சேர்ந்த மகேஸ்வரன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.