சொத்து குவிப்பு வழக்கு - முன்னாள் மோட்டார் வாகன ஆய்வாளர், மனைவிக்கு சிறை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அவரது மனைவிக்கு சிறை தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி தீர்பளித்தார்.

Update: 2023-11-01 02:26 GMT

சிறை தண்டனை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம் களியக்காவிளை வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்தவர் திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரை சேர்ந்த ராஜேந்திரன் (70). இவரது மனைவி ராமலட்சுமி என்ற சந்திரா (60). இவர் கடந்த 1.01. 2000 முதல் 31. 12. 2016 வரை வருமானத்துக்கு அதிகமாக 23 லட்சத்து 50 ஆயிரத்து 424 ௹பாய் மதிப்புக்கு சொத்து சேர்த்ததாக கன்னியாகுமரி மாவட்ட ஊழல் கண்காணிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பான 4 - 03- 2009 ல் கன்னியாகுமரி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி கோகுலகிருஷ்ணன் எதிரிகள் ராஜேந்திரன் மற்றும் அவர் மனைவி ராமலட்சுமி என்ற சந்திரா ஆகியோர் குற்றம் செய்ததை உறுதி செய்தார். தொடர்ந்து ராஜேந்திரனுக்கு 3 ஆண்டு சிறை, 5 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் 2 மாதம் சாதாரண சிறை தண்டனையும் விதித்தார். அவர் மனைவி ராமலட்சுமி என்ற சந்திராவுக்கு ஒரு ஆண்டு சிறை, 5 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும்  2 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் நீதிபதி தனது தீர்ப்பில், வருமானத்து அதிகமாக சேர்த்த சொத்துத் தொகை 23 லட்சத்து 50 ஆயிரத்து 424 ரூபாயை எதிரிகளின்  திருநெல்வேலியில் உள்ள குடியிருப்பு வீட்டை ஏலம் மூலம் விற்று, அரசுக்கு ஈடு செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் துணை சட்ட ஆலோசகர் ஜென்சி வாதாடினார்
Tags:    

Similar News