சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல் - 11 பேர் சிறையில் அடைப்பு
பாளையங்கோட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.;
Update: 2024-06-15 09:02 GMT
மத்திய சிறை
திருநெல்வேலி மாநகர பாளையங்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை நேற்று கலப்பு திருமணம் செய்து வைத்ததை கண்டித்து பெண்ணின் தாய் ,தந்தை உள்பட 13 பேர் அடித்து நொறுக்கியதில் கைது செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் பந்தல் ராஜா உள்பட 11 பேர் இன்று (ஜூன் 15) பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.