பாஜக ஆட்சியில் பழங்குடியினர் மீதான தாக்குதல் அதிகரிப்பு - அமைச்சர்
பாஜக ஆட்சியில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றச் செயல்கள் 45 சதவீதம் அதிகரித்து உள்ளது. 2017 முதல் 2021 வரை பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக குற்றங்களில் 59 ஆயிரத்து 702 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்தியாவில் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மூவை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை. ராமர் கோவில் திறப்பு விழாவுக்கும் அழைக்கவில்லை. இதுதான் பாரதிய ஜனதாவும் பிரதமர் மோடியும் பழங்குடியினருக்கு அளிக்கும் மரியாதையா? என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் 10 ஆண்டு ஆட்சியில் வரலாறு காணாத அளவுக்கு வெறுப்பையும், பகைமையும் மக்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றச் செயல்கள் 45 சதவீதம் அதிகரித்து உள்ளது.
2017 முதல் 2021 வரை பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக குற்றங்களில் 59 ஆயிரத்து 702 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்தியாவில் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மூவை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை. ராமர் கோவில் திறப்பு விழாவுக்கும் அழைக்கவில்லை. இதுதான் பாரதிய ஜனதாவும் பிரதமர் மோடியும் பழங்குடியினருக்கு அளிக்கும் மரியாதையா?
மத்திய அரசு பணிகளில் உள்ள 322 செயலாளர் இணைச் செயலாளர் பதவிகளில் 254 உயர் வகுப்பினர் பணியாற்றுகின்றனர். பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள் அம்பானி, அதானி வளர்ச்சிக்கு தாரைவாக்கப்பட்டு இருக்கிறது. பாரதிய ஜனதா ஆட்சி ஒட்டுமொத்தமாக பட்டியலின மட்டும் பழங்குடியின மக்கள் நலனுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.