அரக்கோணத்தில் பெண் குழந்தையை கடத்த முயற்சி: வடமாநில வாலிபருக்கு தர்ம அடி
தரஅரக்கோணத்தில் பெண் குழந்தையை கடத்த முயன்ற மேற்கு வங்க வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனிபேட்டை லட்சுமணன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தாகத்துக்கு தண்ணீர் தரும்படி அங்கிருந்து பெண்ணிடம் கேட்டுள்ளார்.
அப்பொழுது அந்த பெண்மணி உள்ளே சென்று தண்ணீரை எடுத்துக்கொண்டு வரும்பொழுது வீட்டின் முன்புறம் தூங்கிக் கொண்டிருந்த ஒன்ற வயது பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். உடனடியாக அந்த பெண் அலறிடித்து கூச்சளிட்டுள்ளார் அப்பொழுது மற்றொரு அறையில் படுத்துக் கொண்டிருந்த அவரது மகன் ஓடிப்போய் மர்ம நபரை பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவரது மகன் கூச்சிலிட்டதை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர்
ஓடி வந்து அந்த வடமாநில வாலிபரை மடக்கி பிடித்து அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர் இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை மீட்டு போலீஸ் ஸ்டேஷனில் அழைத்து வந்து விசாரித்ததில் அவர் மேற்கு வங்க மாநிலம் சேர்ந்தவர் என்பதும் தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர்.