சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

சென்னையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;

Update: 2024-02-20 11:12 GMT

கோப்பு படம் 

சென்னை கொளத்தூர் 200 அடி சாலை திருமலை நகரில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு ஏடிஎம் மையத்தில் புகுந்த அடையாளம் தெரியாத இருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

உடனே மும்பையில் உள்ள வங்கி தலைமை அலுவலகத்தில் அலாரம் சத்தம் ஒலித்தால் உஷாரான வங்கி ஊழியர்கள் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ராஜமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ராஜமங்கலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

Advertisement

இதற்கிடையே ஏடிஎம்மில் இருந்த பணப்பெட்டியை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் அப்படியே விட்டு விட்டு தப்பி சென்றனர். பின்னர் சம்பவயிடத்திற்கு சென்ற ராஜமங்கலம் போலீஸார் ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத இருவர் உள்ளே நுழைந்து ஆயுதங்களால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தப்பி ஓடிய கொள்ளையர்களை தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News