கோட்டாட்சியரை கொல்ல முயற்சி - மணல் கடத்தல் கும்பல் அட்டுழியம்

அன்னவாசல் அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியர் கார் மீது மினிலாரியை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-06-15 02:22 GMT

 புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியராக இருப்பவர் தெய்வநாயகி. இவரின் உதவியாளர் ராஜேந்திரன் டிரைவர் கனகபாண்டியன் இவர்கள் மூவரும் சம்பதன்று அலுவலக பணியின் காரணமாக ஒரு காரில் பொன்னமரவாதி தாலுகா ஆலவயல் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் இலுப்பூர் நோக்கி வந்துள்ளனர் காரை கனக பாண்டியன் ஓட்டியுள்ளார்.

அப்போது மணல் கடத்தல் நடப்பதாக வருவாய் கோட்டாட்சியருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இலுப்பூர் தாலுகா கிளிக்குடி வட்டம் பேயால் வருவாய் கிராமம் குடுமியான்மலையில் இருந்து பேயால் சாலையில் வளையப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சென்றபோது அந்தவழியாக வந்த மினிலாரி ஒன்றை வருவாய் கோட்டாச்சியர் நிறுத்தி சோதனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது .

அப்போது அந்த வாகனத்தில் இருந்த இரண்டு நபர்கள் ஆர்டிஒவை  கொலை செய்யும் நோக்கத்துடன் அவர்கள் சென்ற காரின் வலது பக்கமாக மோதியுள்ளனர். அதில் கார் சேதமடைந்தது பின்னர் மீண்டும் மினிலாரியை பின்நோக்கி எடுத்து காரின் மீது மோத வந்த போது காரை டிரைவர் கனக பாண்டியன் இடது பக்கமாக  திருப்பியதால் ஆர்டிஒ உள்ளிட்ட 3 பேர் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர்.கோட்டாட்சியரை கொல்ல முயற்சி - மணல் கடத்தல் கும்பல் அட்டுழியம் பின்னர் காரை எடுத்தால்  வண்டியை ஏற்றியே கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டி  அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மினி லாரியில் இருந்தவர்களை பிடிக்க முற்பட்டபோது மினிலாரியை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர் அந்த வாகனத்தில் பதிவெண்கள் அழிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த இடத்தில் இருந்தவர்களை விசாரித்தபோது அந்த வாகனத்தில் வந்தவரக்ள் கவிநாரிப்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் சுந்தரம் என்றும் அந்த லாரி அவருக்கு சொந்தமானது என்றும் மற்றொருவர் மினிலாரி ஓட்டுனர் வீரையா மகன் சங்கர் என்றும் தெரியவந்தது வாகனத்தின் மீது மினிலாரியை வைத்து கொலை செய்யும் நோக்கத்துடன் மோதியும் கொலைமிரட்டல் விடுத்து அரசு பணியை செய்யவிடாமலும் மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள்  மீது நடவடிக்கை எடுக்குமாறு டிரைவர் கனகபாண்டியன் அன்னவாசல் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News