ஆக. 14 முதல் இளநிலை மருத்துவக் கலந்தாய்வு!

Update: 2024-07-30 05:34 GMT

மருத்துவ கலந்தாய்வு

எம்.பி.பி.எஸ்,பி.டி.எஸ் மற்றும் இளநிலை செவிலியர் படிப்புகளுக்கான மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதியை மருத்துவக் கலந்தாய்வு குழு (MCC)அறிவித்துள்ளது.

அகில இந்திய அளவில் 15% இடங்கள், 100% AIIMS மற்றும் JIPMER மருத்துவக் கல்லூரியில் இருக்கும் இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு குழுவின் மூலம் இடங்கள் நிரப்பப்படுகிறது. இந்தாண்டு உச்ச நீதிமன்றத்தின் வழக்கினால் கலந்தாய்வு தாமதமாக தொடங்கிறது. மருத்துவ கலந்தாய்வு குழுவின் அறிவிப்பின் படி, மூன்று கட்டமாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

அகில இந்திய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14 முதல் 23 வரை முதல் சுற்று மருத்துவக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

2ஆம் சுற்று கலந்தாய்வு செப். 5இல் தொடங்கி செப்.13ஆம் தேதி வரை நடைபெறும்.

செப். 26 முதல் அக்.5 வரை 3ஆம் சுற்று கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 1 லட்சத்து 8 ஆயிரம் மருத்துவ இடங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News