ஆவின் நிறுவனம் விளக்கம்
இன்று மாதவரம் பால் பண்ணையில் பால் விநியோகம் தாமதமானதற்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். ஆவின் நிறுவனம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 15 இலட்சம் லிட்டர் பால், சில்லறை விற்பனையாளர்கள், பால் டெப்போக்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் இன்று மாதவரம் பால் பண்ணையில் இருந்து மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகம் தாமதமாகிறது என ஊடங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இன்று மாதவரம் பால் பண்ணையில் ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை காலதாமதமானதால் சிறிது நேரம் மொத்த விற்பனையாளர்களுக்கு (WSD) அனுப்பப்படும் வாகனங்கள் தாமதமாக பால் பண்ணையை விட்டு வெளியேறின எனவே உடனடியாக அனைத்து மொத்த விற்பனையாளர்களுக்கும் முன்கூட்டிய தகவல் தெரிவித்து மேலும் பால் விநியோக வாகனத்தை தொடர்ந்து கண்காணித்து அனைத்து சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் விநியோகிக்கப்பட்டது இந்நிலையில் பொதுமக்களிடமிருந்தும் எவ்விதமான புகார்களும் பெறப்படவில்லை தெரிவித்து கொள்ளப்படுகிறது.