வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு
தண்டையார்பேட்டை மேல்பட்டி பகுதிகளில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-03-25 15:04 GMT
தண்டையார்பேட்டை மேல்பட்டி பகுதிகளில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, தண்டையார்பேட்டை மண்டலம், மேல்பட்டி பொன்னப்பன் தெரு, சஞ்சய் நகர் 1, 2 மற்றும் 3வது பிரதான தெருக்களில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து என் வாக்கு, என் உரிமை வாசகங்கள் அடங்கிய தன்படம் (Selfie Point) எடுக்கும் வகையிலான பதாகை மூலம் பொதுமக்களுக்கு இன்று (25.03.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது