புகையில்லா போகி - தி.நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு

புகையில்லா போகி மற்றும் ஒரு முறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக் கூடிய நெகிழி பொருட்களால் ஏற்படும் சுகாதார கேடுகள் மற்றும் அதனை தடுக்கும் முறைகள் குறித்து தியாகராய நகரில் உள்ள ஆர்.கே.எம்.சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-01-04 16:48 GMT

புகையில்லா போகி விழிப்புணர்வு 

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக புகையில்லா போகி மற்றும் ஒரு முறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக் கூடிய நெகிழி பொருட்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் அதனை தடுக்கும் முறைகள் குறித்து இன்று (04-01-2024) தியாகராய நகரில் உள்ள ஆர்.கே.எம். சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில், போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள். பழைய டயர் மற்றும் டியூப்கள், காகிதம், போன்றவைகள் எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, அடர்ந்த புகையினால் நுரையீரல் பாதிப்பு, கண் எரிச்சல் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படுத்துவதோடு புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், ஒரு தடவை உபயோகப்படுத்தி தூக்கி எறியக் கூடிய நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி IEC வாகனம் மூலமாக காணொலி காட்சிகள் காண்பிக்கப்பட்டன. பின்னர், அனைவரும் புகையில்லா போகியை கொண்டாடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி, சுகாதார கல்வி அலுவலர் முனைவர் டி.ஜி.சீனிவாசன், சுற்றுச்சுழல் துறை தகவல் அலுவலர் திருமதி டி. இந்திரா தேவி, எக்ஸ்நோரா NGO திரு.ஆர் கோவிந்தராஜ், திரு ஜெபதேராஜ் ஜெயின் மற்றும் தலைமை ஆசிரியை திருமதி என் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News