வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2024-03-22 04:36 GMT

விழிப்புணர்வு பேரணி 

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக வளாகத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழுக்களின் விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.

அந்த பேரணியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட குழுவைச் சேர்ந்த பெண்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News