அயலான் திரைப்பட இடைக்கால தடை நீக்கம்- சென்னை உயர்நீதிமன்றம்
அயலான் திரைப்படம் வெளியாவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.;
Update: 2024-01-11 15:43 GMT
அயலான்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கே ஜே ஆர் நிறுவனம் சார்பில் தயாரான அயலான் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.. இந்த நிலையில் தங்களுக்கு தர வேண்டிய 1 கோடி ரூபாயை செலுத்தாமல் படம் வெளியாக தடை கேட்டு எம்.எஸ் சேலஞ்ச்' என்ற திரைப்பட விளம்பர நிறுவனம் வழக்கு தொடர்திருந்தது. எம் எஸ் சேலஞ்ச் விளம்பர நிறுவனத்திற்கு பட தயாரிப்பு நிறுவனம் 50 லட்சம் ரூபாய் திரும்ப செலுத்தியது. மீதமுள்ள 50 லட்சம் ரூபாய் ஏப்ரல் பத்தாம் தேதிக்குள் செலுத்துவதாகவும் உத்தரவாதம் அளித்த நிலையில் அயலான் படத்தின் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.