சாலையோரத்தில் வீசப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்

விளாத்திகுளத்தில் சாலையோரத்தில் வீசப்பட்ட 10 மூட்டை ரேஷன் அரிசியை வருவாய்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-04-25 16:49 GMT

ரேஷன் அரிசி

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது அறிவுறுத்தலின்படி வட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து மற்றும் பொறியாளர் கணேஷ் ஆகியோர் விளாத்திகுளம்- எட்டயபுரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வைப்பார் ஆற்றுப்பாலம் அருகே சாலை ஓரத்தில் இருக்கும் வேம்பு மரத்தின் அடியில் 10 அரிசி மூட்டைகள் கிடந்தன. 

Advertisement

இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில், தாசில்தார், துணை தாசில்தாா் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கிடந்த சுமார் 700 கிலோ எடை கொண்ட 10 ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்து, விளாத்திகுளம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர். தொடர்ந்து இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்தவர்கள் யார்? என வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News