பெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு தள்ளுபடி
யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட்டின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Update: 2024-06-25 01:38 GMT
காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார். 47 நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் பதியபட்டுள்ளது, என்று மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. மனுதார் கேள்வி உள் நோக்கம் கொண்டது. பிரச்சனையை தூண்டும் வகையில் கேள்வி இருந்தது. மனுதார் படிக்காதவர் அல்ல, எனவே தற்போது ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி தமிழ்செல்வி தெரிவித்தார். தன்னுடைய கேள்வி பிறரை பாதிக்கும் விதத்தில் அமைந்திருப்பதால் மன்னித்து கொள்ளவும் என்று பெலிக்ஸ் ஜெரால்ட் தெரிவித்துள்ளார்.