முன்னாள் சபாநாயகர் சகோதரருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து
அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.;
Update: 2024-05-20 16:17 GMT
அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டு மாதங்களில் மொத்த பணத்தையும் திரும்ப அளிப்பதாக கூறிய நிலையில் விஜய நல்லதம்பிக்கு ஜாமீன் வழங்கியது சைதாப்பேட்டை நீதிமன்றம். உறுதி அளித்தப்படி பணத்தை திரும்ப வழங்கவில்லை என்பதால் அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட மொஹிதின் மனு அளித்துள்ளார்.