வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை

சென்னையில் வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை சென்னை மாநகர காவல்துறை சிவப்பு மண்டலமாக அறிவித்ததுள்ளது.

Update: 2024-05-03 07:38 GMT

சென்னையில் வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை சென்னை மாநகர காவல்துறை சிவப்பு மண்டலமாக அறிவித்ததுள்ளது.


மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் பொருட்டு 4 தேதி வரை சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடைசெய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு 4 தேதி வரை ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
Tags:    

Similar News