வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநில முழுவதும் அமல்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Update: 2024-05-10 03:36 GMT
சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வாகனங்களின் கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும் என்றும் பேருந்துகளின் பின்புறம் மற்றும் இருபுறங்களில் வணிக விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. மேலும் கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் ஆர். கலைமதி அமர்வு ஒத்திவைத்தது.