பரங்கிப்பேட்டையில் வட்டாட்சியர் ஆய்வு
By : King 24X7 News (B)
Update: 2023-11-14 10:13 GMT
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் மழைநீர் வடிகால் பணிகளை புவனகிரி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி தீவிரமாக ஆய்வு செய்தார். இது மட்டும் இல்லாமல் மழைநீர் அகற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் முகமது யூனுஸ் எடுத்துரைத்தார். உடன் பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி, பரங்கிப்பேட்டை விஏஓ சுகுமாரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.