கூல்ட்ரிங்ஸ் நிறுவனத்தின் மீது ஆதாரமற்ற புகார்.... 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு !
கூல்டிரிங்ஸ் குடித்து குழந்தை இறக்கவில்லை - டெய்லி கூல்டிரிங்ஸ் நிறுவனம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர்.
கூல்டிரிங்ஸ் குடித்து குழந்தை இறக்கவில்லை - டெய்லி கூல்டிரிங்ஸ் நிறுவனம் ஆதாரத்துடன் புகார். நாமக்கல் தலைமை இடமாகக் கொண்டு நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருச்சி மாவட்டம் மணப்பாறை உள்ளிட்ட ஐந்து இடங்களில் டெய்லி கூல் ட்ரிங்க்ஸ் நிறுவனம் மூலமாக தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி ரூபாய் அளவிற்கு இந்த டெய்லி கூல்டிரிங்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் கூல் ட்ரிங்க்ஸ் விற்பனையாகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் கனி கிலுப்பை கிராமத்தில் 5- வயது சிறுமி காவியா ஸ்ரீ இந்த டெய்லி கூல்ட்ரிங்க்ஸ் குடித்து இறந்து விட்டதாக இறந்த காவிய ஸ்ரீ- யின் தந்தை ராஜ்குமார் என்பவர் அவதூறு செய்தியை பரப்பி உள்ளார். அதனால் டெய்லி கூல் ட்ரிங்க்ஸ் நிறுவனம் பல கோடி இழப்பை சந்தித்து உள்ளதாம் இதனால் டெய்லி கூல்டிரிங்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை நேஷனல் புட் லேபட்டரி சென்னை இன்ட்ரஸ்ட் டெஸ்டிங் சென்டர் உள்ளிட்ட லேப் உள்ளிட்ட லேப்களில் டெஸ்ட் செய்யப்பட்டது.
கூல்டிரிங்ஸ் தரமாக உள்ளதாக அறிக்கை வந்துள்ளதாம் அந்த அறிக்கையுடன் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் தூசி காவல் நிலையத்தில் டெய்லி கூல்டிரிங்ஸ் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் அவதூறு பரப்பிய கனிக்கிலுப்பை கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் மீது கிரிமினல் அவதூறு மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.